Monday, December 9, 2024

முஸ்லிம் பெண்ணின் ‘பர்தா’ அகற்றம்: உ.பி.,யில் சர்ச்சை!!

spot_imgspot_imgspot_imgspot_img

உ.பி.,யில், முதல்வர் பங்கேற்ற நிகழ்ச்சிக்கு வந்திருந்த பெண் அணிந்திருந்த, ‘பர்தா’வை, போலீசார், கட்டாயப்படுத்தி அகற்றும்படி கூறியதாக, சர்ச்சை எழுந்துள்ளது. இது குறித்து, விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

உ.பி.,யில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள பாலியாவில், நேற்று முன்தினம், பா.ஜ., சார்பில் நடந்த, உள்ளாட்சி தேர்தல் பிரசாரக் கூட்டத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் பங்கேற்றார். இந்த பிரசாரக் கூட்டத்துக்கு வந்திருந்த, சாயிரா என்ற பெண், கறுப்பு நிற பர்தா அணிந்திருந்தார். அப்போது, அங்கு வந்த பெண் போலீசார், பர்தாவை அகற்றும்படி, சாயிராவை கட்டாயப்படுத்தினர். இது தொடர்பான வீடியோ, உள்ளூர், ‘டிவி’ சேனல்களில் வெளியாகி, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இது குறித்து, சாயிரா கூறுகையில், ”நான், பா.ஜ., தொண்டர். கிராமத்தில் இருந்து நீண்ட துாரம் பயணித்து, இந்த பிரசாரக் கூட்டத்துக்கு வந்திருந்தேன். பாரம்பரிய முறைப்படி, கறுப்பு நிற பர்தா அணிந்திருந்தேன். ஆனால் போலீசார், அதை அகற்றச் சொல்லி விட்டனர்,” என்றார்.

இது குறித்து, அதிகாரிகள் கூறுகையில், ‘முதல்வருக்கு யாரும் கறுப்பு கொடி காட்டிவிடக் கூடாது என்பதற்காக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அந்த பெண்ணிடம் பர்தாவை அகற்றும்படி கூறினோம். ‘இதை பிரச்னையாக்கி விட்டனர். இதையடுத்து, இது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது’ என்றனர்.
போலீசார் தங்களது தரப்பில் நியாமம் கூறியிருந்தாலும், இந்த சம்பவத்திற்கு சமூக ஆர்வலர்கள் இடையே கண்டனம் எழுந்துள்ளது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

உ.பி. பாணியில் மாட்டிறைச்சி அரசியலை கையில் எடுக்கும் அதிரை நகராட்சி! பின்னால்...

அதிராம்பட்டினம் நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட பிறகு வார்டு மறுவரையரையில் சிறுபான்மை முஸ்லீம் பிரதிநிதிதுவத்தை குறைத்தது, கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட துணை தலைவர் பதவியை...

அதிரை: எல்லாமே பூஜைக்கு அப்புறம்தான்- நீரில் மிதக்கும் பகுதியை மீட்க சாக்கு...

அதிராம்பட்டினம் தோப்புக்காடு பகுதியில் உயரமாக அமைக்கப்பட்ட தார்சாலையால் ஒரு வீட்டிற்குள் புகுந்த மழை நீர் வடியாமல் தேங்கி நிற்கிறது என மனிதநேய ஜனநாயக...

மரண அறிவிப்பு – அஜ்மீர் ஸ்டோர் ஹாஜி மு.அ முஹம்மத் சாலீஹ்...

. அதிராம்பட்டினம் நடுத்தெரு கீழ்புறம் மோட்டுகொள்ளை அஜ்மீர் ஸ்டோர் குடும்பத்தை சேர்ந்த மர்ஹும் மு.அ அசனா மரைக்காயர் அவர்களின் மகனும், மர்ஹும் ஹாபிழ் முஹம்மது...
spot_imgspot_imgspot_imgspot_img