திராவிட முன்னேற்ற கழக தலைமை கழக பேச்சாளர் சிரங்குடி ஊராட்ச்சியை சேர்ந்த மாரியார் என்கிற மாறி பன்னீர் செல்வம் இன்று காலை நடந்த சாலைவிபத்தொன்றில் மரணமடைந்த்தார். இவர் திராவிட முன்னேற்ற கழக பொது கூட்ட மேடைகளில் கட்சியின் கொள்கை கோட்பாடுகளை எளியமுறையில் எடுத்துரைக்கும் வல்லமை படைத்தவராவார்.
இவரது மறைவு கழகத்திற்கும், தொண்டர்களுக்கும் ஈடு செய்ய இயலாத பேரிழப்பாகும் என மாவட்ட கலை இலக்கிய பண்பாட்டு பகுத்தறிவு பேரவையின் ஒருங்கிணைப்பாளர் பழஞ்சூர் செல்வம் தெரிவித்துள்ளார்.
முன்னதாக மறைந்த மாரியார் இல்லத்திற்கு சென்று அவர் அஞ்சலி செலுத்திய பின்பு அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தினற்கு ஆறுதல் தெரிவித்ததோடு, அன்னாரின் ஆன்மா இறைவனின் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுவதாக தெரிவித்தார்.
இந்நிகழ்வில் கழக தொண்டர்கள்,காலை இலக்கிய பகுத்தறிவு பேரவையின் நிர்வாகிகள்
பலர் உடனிருந்தனர்.