தஞ்சை மாவட்டம், மல்லிப்பட்டிணத்தில் காங்கிரஸ் கட்சியினர் சார்பில் இந்திரா காந்தியின் 36வது நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.
இதில் காங்கிரஸ் கட்சியின் மாவட்ட பொதுச்செயலாளர் கமால் பாட்ஷா தலைமை தாங்கினார்.வட்டாரத் தலைவர் ஷேக் இப்ராஹிம் முன்னிலை வகித்தார்.ஆளும் பாஜக அரசின் விவசாய விரோத போக்கை கண்டித்தும்,சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தியும் குடியரசு தலைவருக்கு கையெழுத்து அனுப்பும் விதமாக பொதுமக்கள், வியாபாரிகள், விவசாயிகள் என அனைவரிடத்திலும் கையெழுத்து பெற்றனர்.
அப்துல் ஜப்பார்,பேராவூரணி தொகுதி இளைஞர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் நூருல் அமீன் மாநில மீனவர் அணி செயலாளர் வடுகநாதன், கமிட்டியின் செயலாளர் காதர் சா,கணபதி ஞானசேகரன், ருக்னுதீன் புதுபட்டினம் ரெங்கசாமி மற்றும் பலர் கலந்து கலந்துகொண்டு சிறப்பித்தனர்.



