அதிரையில் நேற்று 30/10/2020 வெள்ளிக்கிழமை மாலை 5 மணி அளவில் SDPI கட்சி சார்பில் அரசியல் பயிலரங்கம் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு SDPI கட்சி அதிரை நகர தலைவர் S.அஹமது அஸ்லம் தலைமை தாங்கினார்.
SDPI கட்சியின் மாநிலச் செயலாளர் வழக்கறிஞர் N. சஃபியா அவர்கள் சிறப்புரை ஆற்றினார்கள் மற்றும்
SDPI கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் N. முகமது புகாரி.MBA அவர்களும் சிறப்புரையாற்றி இந்த பயிலரங்கத்தை நடத்தி கொடுத்தார்கள்.
SDPI கட்சியின் தொண்டர்களுக்கும் நிர்வாகிகளுக்கும் அவர்களுடைய சந்தேகங்களுக்கு மற்றும் அவர்களுடைய கேள்விகளுக்கு மாநில செயலாளரும் மாவட்ட தலைவரும் பதிலளித்தனர்.
எஸ்டிபிஐ கட்சியின் அதிரை நகர இணைச் செயலாளர் C.அஹமது.Msc அவர்கள் நிகழ்வை தொகுத்து வழங்கினார்.
2021 சட்டமன்ற தேர்தலை முன்னோக்கி SDPI கட்சியின் மாநிலத் தலைமை அறிவித்தபடி தஞ்சை தெற்கு மாவட்டத்தில் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதி மற்றும் பேராவூரணி சட்டமன்ற தொகுதியில் வேட்பாளரை நிறுத்த கூடிய சூழ்நிலை காரணமாக அதனுடைய முன்னேற்பாடாக இந்நிகழ்வு நடைபெற்றது.
இக்கூட்டத்தில் கட்சியின் செயல்பாடுகள் மற்றும் கட்சியின் வெற்றிப்படிகள் நோக்கிய அடுத்தகட்ட செயல்பாடுகள், பூத் கமிட்டிகள் வலுப்படுத்துவது மற்றும் பூத் கமிட்டிகள் இல்லாத இடங்களில் பூத் கமிட்டி களை உருவாக்குவது போன்ற பல முக்கியமான செய்திகள் பேசப்பட்டன.
இக்கூட்டத்திற்கு எஸ்டிபிஐ கட்சியின் மகளிர் அணி நிர்வாகிகளும் உறுப்பினர்களும் மற்றும் எஸ்டிபிஐ கட்சியின் நிர்வாகிகளும் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். இறுதியாக எஸ்டிபிஐ கட்சியின் நகர செயற்குழு உறுப்பினர் M.ஜர்ஜிஸ் அஹமது நன்றி கூறினார்.





