Thursday, April 18, 2024

கேலிச்சித்திர விவகாரம்: மோடிக்கு முஸ்லீம் லீக் சூடு !

Share post:

Date:

- Advertisement -

உலக அமைதியை சீர்குலைக்கும் வகையில் செயல்படும் பிரான்சு நாட்டின் போக்கை வரவேற்றுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் விடுத்துள்ள அறிக்கையில்,

2015ஆம் ஆண்டில் பிரான்சு நாட்டில் வெளிவரும் கார்டூன் வாரஇதழ் “சார்லி ஹெப்டோ”, நபிகள் நாயகம் அவர்களின் உருவப்படத்தை சித்திரம் தீட்டிகேலிச்சித்திரம் வெளியிட்டது. இதற்கு உலகம் முழுவதிலும் பெரும் எதிர்ப்புக் கிளம்பியது; பல நாடுகளில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்களில் இருநூறுக்கு மேற்பட்டவர்கள் பலியாயினர்.

இந்த நிகழ்வு ஓர் உண்மையை உலகிற்குத் தெளிவாக அறிவித்திருக்கிறது. இஸ்லாமிய மார்க்கத்தில் ஏக இறைவனை – உருவமில்லாத ஓர் இறையை வணங்குவதும், நபிகள் நாயகம் அந்த உருவமற்ற ஏகத்துவத்தின் இறுதித்தூதர் என்று இதயப்பூர்வமாக நம்பி, அவர்காட்டிய வழியிலும், அவர் ஊட்டிய நெறியிலும் முஸ்லிம்கள் வாழ்வதும் அடிப் படைக் கொள்கைகளாகும்.

இஸ்லாமிய மார்க்கத்தில் இல்லாத ஒன்றை தங்களுடைய விருப்பத்திற்கேற்ப ஒன்றை உருவாக்கி, அதை பரப்புவதில் சுகம் காண்பது, அறிவு ஜீவிகள் என்போரின் வக்கிரமே தவிர, அது
வாய்மையின்பாற்பட்டதாக ஒருபோதும் அமையாது.

இஸ்லாமிய உலகில்இத்தகைய வக்கிரத்தை
எதிர்க்கவில்லை யெனில்,முஸ்லிம்கள் பின்பற்றும் மார்க்கம் இஸ்லாமாகஇருக்காது; எல்லாமதங்களும் அவைகளின்அடிப்படைகளில் இருந்துபிறழ்ந்து, ஆரம்பத்தில்இல்லாததை, இப்போது இருப்பதாக உருவாக்கிக்கொண்டு, அவற்றைத்தலையில் தூக்கி வைத்துக்கொண்டாடும் கலைவிளைத்த கற்பனையாகவே இஸ்லாமும் மாறிப்போயிருக்கும். இந்த நிலைக்கு இஸ்லாமிய நெறி இடறி படுகுழியில் விழவில்லை என்பதன் அடையாளந்தான்,

இச்செய்திநாடு முழுவதிலும் பரவி,அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பிரான்சு அதிபர்,நபிகள் நாயகம் ஓவிய கார்டூனைவேண்டுமென்றே வகுப்பறையில் மாணவர்களுக்குக்காட்டிய ஆசிரியரின் வக்கிர புத்தியைக் கண்டிக்கவில்லை.

மாறாக, பிரான்சு நாடு, கருத்துச் சுதந்திரமும்எழுத்துச் சுதந்திரமும்பேணும் நாடு. இங்கேஇத்தகைய மதத்தலைவர்களைப் பற்றிய கேலிச்சித்திரம் வெளியிடுவதற்குஎல்லா உரிமைகளும் உண்டு.முஸ்லிம்கள் தங்களுக்கெனஒரு தனி கலாச்சாரத்தை பின்பற்றி, பிரான்சு மக்களிடையில் பிரிவினையை ஏற்படுத்துவதை
அனுமதிக்க முடியாது.

பிரான்சு நாட்டுப் பண்பாடுகளும், சுதந்திரங்களும் பாதுகாப்பதற்கு எல்லா விதமான நடவடிக்கைகளையும் அரசு மேற்கொள்ளும் என்று வீர வசனங்கள் பேசியுள்ளார்.பிரான்சு அதிபரின் பேச்சுக்கு முஸ்லிம் நாடுகளில் கடுமையான எதிர்ப்புகள் எழுந்தன. துருக்கி அதிபர் எர்டோகன், பிரான்சு அதிபருக்கு மனோதத்துவ மருத்துவம் செய்ய வேண்டும் என்றார். பல முஸ்லிம் நாடுகளில் பிரான்சு பொருட்கள் வாங்க விற்கத் தடை கோரப்பட்டுள்ளன.பிரான்சு அதிபரின்
போக்கையும் நோக்கையும் கண்டித்து பங்களாதேசத்தில் பெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்துள்ளது.

அதைத்தொடர்ந்து மலேசியா,இந்தியா ஆகிய நாடுகளில்கண்டனங்கள் குவிந்து வருகின்றன. அரபு நாடுகளிலும்,
ஆப்பிரிக்க நாடுகளிலும் பிரான்சு அதிபரின் கருத்துக்கு கடுமையான எதிர்ப்பு, ஆர்ப்பாட்டங்கள் வாயிலாக வெளிவந்த வண்ணமாக உள்ளன.

இந்நிலையில் கடந்த 29-10-2020 வியாழக்கிழமை அன்று பிரான்சு நாட்டின் நீஸ் நகரில் உள்ள நாட்டர் டாம் கிறிஸ்தவ தேவாலயத்தில் ஒரு டுனீஷியா இளைஞர் புகுந்து மூவரைக் கொன்று பலருக்கு
காயம் ஏற்படுத்திய வேதனை மிகுந்த துயர சம்பவம் நிகழ்ந்திருக்கிறது. தேவாலயத்தில் நடத்தப் பட்ட வன்முறை பயங்கரத்தை, ‘பிரெஞ்சு கவுன்சில் ஆஃப்
முஸ்லிம் பெயித்’ அமைப்பு வன்மையாகக் கண்டித்திருக்கிறது. இந்தியாவில் உள்ள தேவ்பந்து மதராஸாவும்,கெய்ரோவில் உள்ள
அல்அஜ்ஹர் பல்கலைக்கழகமும், உலகின் பல்வேறுமுஸ்லிம் அமைப்புகளும் இதனை கடுமையாகக் கண்டித்திருக்கின்றன.

இந்திய யூனியன் முஸ்லிம் லீகைப் பொறுத்த
வரையில், வகுப் பாசிரியரை மாணவர் கொலைசெய்த கொடுமையையும், தேவாலயத்தில் புகுந்து அப்பாவி கிறிஸ்தவர்களைக் கொல்லும் வன்முறையும்
ஒருபோதும் ஏற்றுக்கொள்ளக் கூடியதோ, சகித்துக் கொள்ளக்கூடியதோ அல்ல. இதுபோன்ற கோரத்தாண்டவங்களை இஸ்லாம்ஒருபோதும் ஏற்காது. முஸ்லிம் உலகில், இஸ்லாம் என்பது அமைதி வழியில் அகிலத்திற்கு ஆக்கமும் உன்னத நோக்கமும் கற்பிக்கும் மார்க்கம் என்பதை உணர்ந்திட முழு முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
தீவிரவாதம், பயங்கரவாதம், திரிபு வாதம், குண்டு கலாச்சாரம், போன்றவற்றுக்கு முற்றுப்புள்ளி வைப்பதில் முஸ்லிம் நாடுகள்
முன்னணியில் நிற்க வேண்டிய காலக்கட்டாயம் இன்றுஏற்பட்டிருக்கிறது.

பிரான்சு நாடு, இஸ்லாத்தில் இல்லாத ஒன்றை இருப்பதாகக் கூறுவதை நியாயப்படுத்தும் வகையில் கருத்துச் சுதந்திரம் பற்றி பேசுகிறது. இது நீதிக்குப்புறம்பானது; தர்மத்திற்கு
எதிரானது; உலக அமைதிக்கு முரணானது.

பிரான்சின் இந்தப்போக்கை இந்திய பிரதமர்
நரேந்திர மோடி வரவேற்றிருக்கிறார். மோடி அவர்களின்முஸ்லிம் விரோதப் போக்கு, இப்போது இஸ்லாம்விரோதப் போக்காகப்
பரிணமித்திருக்கிறது.

இஸ்லாமிய மார்க்கத்தில்இல்லாத ஒன்றை இருப்பதாகக் கூறுவதை நியாயப்படுத்துவது
குதர்க்கத்தின் கொள்கையாகும். இந்தக் கொள்கையில் பாரதப் பிரதமர் முழு நம்பிக்கைகொண்டிருப்பது வேதனையிலும் வேதனையாகும்.இந்தியாவில் இதற்கு முன்னர்
இருந்த எந்தவொரு மத்திய அரசும் பின்பற்றாத ஒரு கொள்கையை – முஸ்லிம் விரோத – இஸ்லாம் விரோத கொள்கையை இன்றைய
மத்திய அரசு வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறது. உலக முஸ்லிம் நாடுகளும், உலக இஸ்லாமிய அறிஞர்களும், இந்திய
முஸ்லிம் சமுதாயமும் பாரதப் பிரதமரின் போக்கையும்,நோக்கத்தையும் சரியாகப்
புரிந்திட இப்போது தருணம் ஏற்பட்டிருக்கிறது.

இஸ்லாம் ஜிந்தா ஹோத்தாஹை ஹர் கர்பலா கே பகத் – ஒவ்வொரு கர்பலாவுக்கும் பிறகு இஸ்லாம் புத்துயிர் பெற்று எழுகிறது!
என்று மௌலானா முஹம்மது அலி ஜவ்ஹர்
ஒருமுறை கூறினார்.

இப்போது, பிரான்சு நாட்டு அதிபரின் அநீதியான கொள்கையால், இஸ்லாமிய நெறி ஐரோப்பாவில் மட்டுமின்றி, அகிலம்
முழுவதிலும் புத்துயிர் பெற்று எழப்போகிறது என்று ஆன்மீகப் பெரியார்கள் கூறுகிறார்கள்.

இன்றைக்கு வாய்த்த சிந்தனை நாளைக்கு வரப்போகும் வரலாறு!
இவ்வாறு அறிக்கையில் பேராசிரியர் காதர் மொகிதீன் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...

மரண அறிவிப்பு : ஹாஜிமா சிராஜ் ஃபாத்திமா அவர்கள்.!!

ஆஸ்பத்திரி தெருவை சேர்ந்த மர்ஹூம் M.மஹ்மூது அலியார் ஹாஜியார் அவர்களின் மகளும்,...