Home » அதிரை AFSC அணியின் மிண்ணொளி கைப்பந்து தொடர் : உச்சிமுகர்ந்த அப்துல்லாஹ் & பிரதர்ஸ்!!

அதிரை AFSC அணியின் மிண்ணொளி கைப்பந்து தொடர் : உச்சிமுகர்ந்த அப்துல்லாஹ் & பிரதர்ஸ்!!

0 comment

அதிரை ஃபிரண்ட்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பாக முதலாம் ஆண்டு மின்னொளி கைப்பந்து தொடர் போட்டி அதிரை கிராணி மைதானத்தில் நடைபெற்றது.

இந்த போட்டியில் 30 க்கும் மேற்பட்ட உள்ளூர் மற்றும் வெளியூர் அணிகள் கலந்து கொண்டு விளையாடின.

நாக் – அவுட் சுற்று முறையில் நடைபெற்ற போட்டியில் இறுதிவரை பரபரப்புக்கு பஞ்சமில்லை.

இறுதிப் போட்டியில் அப்துல்லாஹ் & பிரதர்ஸ் அணி தஞ்சாவூர் பிளாக்ஸ் அணியை வீழ்த்தி அதிரை AFSC அணியின் முதலாவது கைப்பந்து தொடர் போட்டியின் வெற்றி கோப்பையை உச்சிமுகர்ந்தது.

முதல் பரிசு பெற்ற அப்துல்லாஹ் & பிரதர்ஸ் அணிக்கு ₹.8,000 ரொக்கமும், சுழல் கோப்ப்பையும், இரண்டாமிடம் பெற்ற தஞ்சாவூர் பிளாக்ஸ் அணிக்கு ₹.5,000 ரொக்கம் மற்றும் சுழல் கோப்பையும் வழங்கப்பட்டது.

2 நாட்கள் பகலிரவாக நடைபெற்ற AFSC அணியின் கைப்பந்து தொடர்ப் போட்டி அதிரை கைப்பந்து பிரியர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter