Home » பள்ளிகள் திறப்பதில் ஏன் இந்த அவசரம்? அரசுக்கு ஸ்டாலின் கேள்வி!

பள்ளிகள் திறப்பதில் ஏன் இந்த அவசரம்? அரசுக்கு ஸ்டாலின் கேள்வி!

by
0 comment

பள்ளிகள் திறக்கப்படுவதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் பரவும் கரோனா தொற்று காரணமாக பள்ளி, கல்லூரிகள் காலவரை இன்றி மூடப்பட்டுள்ளது..  இருப்பினும் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.  இது மாணவர்களுக்கு மிகவும் சிரமமாக உள்ளதாகப் பெற்றோரும் ஆசிரியர்களும் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தனர்.

கரோனா தொற்றின் வேகம் சற்று குறைந்துள்ளதால், பள்ளிகள் மற்றும் திரையரங்குகளைத் திறக்கலாம் என்று மத்திய அரசு அக்டோபர் 30-ம் தேதி அறிவித்தது. இதனை அடுத்து தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு தொடரும் என்று முதலமைச்சர் பழனிசாமி அறிவித்தார்.

அதன்படி தமிழகத்தில் பல்வேறு தளர்வுகளுடன், நவம்பர் 30-ம் தேதி வரை பொது முடக்கம் நீடிக்கும். 9,10,11 மற்றும் 12 ஆகிய மாணவர்களுக்கு நவம்பர் 16 முதல் வகுப்புகள் தொடங்கப்படும் என்று தமிழக அரசு அறிவிப்பில் வெளியிடப்பட்டது.

இந்த அறிவிப்புக்குப் திமுக தலைவர் ஸ்டாலின் “பள்ளிகள் திறப்பில் அவசர கோலமான அறிவிப்பு ஏன்?  என கேள்வி எழுப்பியுள்ளார்.

கொரொனா குறித்த ஆராய்ச்சிகள், எச்சரிக்கைகள் கவனத்தில் எடுக்கப்பட்டனவா ?

பெற்றோர் – ஆசிரியர்- மருத்துவர்களுடன் ஆலோசனைகளை பெற்று ஜனவரி 2021-ல் அப்போதைய சூழலை ஆய்ந்துதான் பள்ளிகள் திறப்பு குறித்து முடிவெடுக்க வேண்டும்.” என்றுதமது ட்வீட் பக்கத்தில்  குறிப்பிட்டுள்ளார்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter