Home » கொரோனாவிற்கான தடுப்பூசியைப் போட்டுக்கொண்டார் துபாய் ஆட்சியாளர்..!!

கொரோனாவிற்கான தடுப்பூசியைப் போட்டுக்கொண்டார் துபாய் ஆட்சியாளர்..!!

by
0 comment

ஐக்கிய அரபு அமீரகத்தின் துணைத் தலைவரும் பிரதமரும் துபாய் ஆட்சியாளருமான ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் கொரோனாவிற்கான தடுப்பூசியினைப் இன்று செலுத்திக்கொண்டார்.

அவர் தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் கொரோனாவிற்கான தடுப்பூசியினைப் பெற்றவாறு எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து அத்துடன், “அனைவரையும் பாதுகாக்கவும், அனைவரையும் குணமாக்கவும் நாங்கள் கடவுளிடம் கேட்டுக்கொள்கிறோம்” என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் இந்த கொரோனா வைரஸிற்கான தடுப்பூசியைப் முதன்முறையாகப் பெற்ற நாடுகளில் ஒரு நாடாக அமீரகம் திகழ்வதற்கு கடுமையாக உழைத்த குழுக்களின் முயற்சிகளை நாங்கள் தாம் பாராட்டுவதாக அதில் குறிப்பிட்டு உள்ளார்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் எதிர்காலம் எப்போதும் சிறப்பாகவும் அழகாகவும் இருக்கும் என்றும் தெரிவித்துள்ள அவர், கொரோனாவிற்கான தடுப்பூசியினை அவசரகால பயன்பாட்டிற்கு உபயோகப்படுத்த ஐக்கிய அரபு அமீரகம் ஒப்புதல் அளித்ததை அடுத்து ஐக்கிய அரபு அமீரகத்தின் முன்னணி வீரர்கள், அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் கொரோனா தடுப்பூசியினை பெற்று வருவதாக பதிந்துள்ளார்.

சீனாவின் சினோபார்ம் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட இந்த தடுப்பூசி தற்பொழுது மருத்துவ பரிசோதனைகளின் மூன்றாவது மற்றும் இறுதி கட்டத்தில் உள்ளது என தமது ட்வீட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter