அமெரிக்காவில் அதிபரை தேர்தெடுக்கும் தேர்தல் நேற்று நடைபெற்றன. இதில் தற்போதைய அதிபர் ட்ரம்ப் – ஜோ பிடன் இருவருக்குமிடையே கடும் போட்டி நிலவியது.

இந்த நிலையில் இன்று வாக்கு எண்னிக்கை தொடங்கியது இதில் இண்டியானா, கென்டகி, ஜார்ஜியா உள்ளிட்ட மாகாணங்களில் உடனடியாக வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இண்டியானாவில் 11 எலக்டோரல் வாக்குகளை டொனால்ட் டிரம்ப் பெற்றுள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
கென்டகியில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றதாக சி.என்.என். செய்தி நிறுவனம் கூறியுள்ளது. டெக்சாஸ், நியூ ஹாம்ஷ்பையரில் ஜோ பிடன் முன்னிலை வகிக்கிறார்.தெற்கு கரோலினாவில் டிரம்ப் முன்னிலையில் உள்ளார். ஜார்ஜியாவில் 4 வாக்குகளுடன் ஜோ பிடன் முன்னிலையில் உள்ளார்.