அதிராம்பட்டினம் அருகேயுள்ள நரசிங்கபுரம் முடுக்குகாடு கிராமத்திற்கு பணி நிமித்தமாக வந்திருந்த தேனி மாவட்டம் உத்தமபாளையம், சித்தலைச்சேரி பகுதியை சேர்ந்த வின்செண்ட் வயது 45 என்ற வாலிபரை அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் அரிவாளால் வெட்டியுள்ளனர்.
இதில் நிலை தடுமாறிய வின்சென்ட் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறை சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி விசாரனை செய்து வருகின்றனர்.