வீதிக்கு வந்த ஆதரவாளர்கள்!!
அமெரிக்காவில் அதிபருக்காக நடைபெற்ற தேர்தலை அடுத்து வாக்குகளை எண்ணும் பணி நேற்று தொடங்கியது. குடியரசுக் கட்சி சார்பாக தற்போதைய அதிபர் டொனால்டு ட்ரம்ப்-ம், ஜனநாயகக் கட்சி சார்பில் ஜோ பைடனும் போட்டியிட்டார்கள்.

இம்முறை யார் அடுத்த அதிபர் எனும் குழப்பம் நீட்டித்து வருகிறது.தற்போதைய நிலவரப்படி ஜோ பைடன் 264; ட்ரம்ப் 214 என்று உள்ளது. பைடன் வெற்றி பெற இன்னும் 6 ஆதரவு தேவை.
தேர்தலில் மோசடி நடந்திருப்பதாக அதிபர் ட்ரம்ப் நேற்று தெரிவித்திருந்தார். மேலும், பென்சில்வேனியா மாகாணத்தில் வாக்கு எண்ணிக்கையை நிறுத்த வேண்டும் என்று கோரியிருந்தார். ஆனால், அந்த மாகாண ஆளுநர் தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று அறிவித்திருக்கிறார்.
இந்நிலையில் நியூயார்க், சிகாகோ பகுதிகளில் தேர்தல் தொடர்பான போராட்டங்கள் நடைபெறுகின்றன. ஓரிகன் உள்ளிட்ட சில இடங்களில் ட்ரம்ப்க்கு எதிராகவும் பைடனுக்கு ஆதரவாகவும் சிலர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.