அதிராம்பட்டினம் தொழிலதிபர் பலஞ்சூர் செல்வம் திராவிட முன்னேற்ற கழகத்தின் மாவட்ட கலை இலக்கிய பணபாட்டு பேரவையின் மாவட்ட அமைப்பாளராக இருந்த இவர், கழக வளர்ச்சி பணியகளில் பம்பரமாக சுழன்று வருபவர் திரு செல்வம்.

இந்த நிலையில், இவரின் ஆற்றல்மிக்க பணிகளை கண்ட திராவிட முன்னேற்ற கழக நிர்வாகிகள் மாநில அளவிலான பொறுப்பு வழங்கிட வலியுறுத்தினர். அதன் பேரில் ஆய்வு செய்த மாநில நிர்வாகம் இவருக்கு கலை இலக்கிய பணபாட்டு பேரவையின் மாநில செயலாளர் பதவியை வழங்கியது.

இதனை அடுத்து அக்கட்சியை சேர்ந்த பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இன்று காலை நகர திமுகழகம் சார்பில் அதன் முக்கிய நிர்வாகிகள் நகர செயலாளர் இராம குணசேகரன் தலைமையில் பழஞ்சூர் செல்வத்தை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். இதில் MMS குடும்பத்தை சேர்ந்த முக்கிய நபர்கள் கலந்துக்கொண்டு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.