63
பீகாரில் பாஜக வெற்றியடைந்ததை முன்னிட்டு தமிழக பாஜகவின் வானூர் அடுத்த திருச்சிற்றம்பலம் கிளை தொண்டர்கள் பேருந்து நிலையம் அருகே பட்டாசு வெடித்து கொண்டாடினர். அதன் அருகே திமுக சார்பில் தமிழகம் மீட்போம் காணொளி காட்சி கூட்டம் நடந்து கொண்டிருந்தது அப்போது பாஜகவினர் அங்கு பட்டாசு வெடித்தது திமுக தொண்டர்களுக்கு இடையே பெரும் கோபத்தை ஏற்படுத்தியது.
இதன் காரணமாக திமுகவினர் மற்றும் பாஜகவினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, ஒரு கட்டத்தில் முற்றி கைகலப்பாக மாறியது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மோதலில் ஈடுபட்ட கூட்டத்தை கலைத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.