Home » அமீரகத்தில் இந்து கோவில் கட்டும் பணி தீவிரம்!

அமீரகத்தில் இந்து கோவில் கட்டும் பணி தீவிரம்!

by
0 comment

இஸ்லாமிய நாடான துபாய் நகரங்களில் இந்தியாவை சேர்ந்த பலரும் பணி நிமித்தமாக வாழ்ந்து வருகின்றனர். அபுதாபியில் 20%க்கும் அதிகமாக இந்தியாவை சேர்ந்த இந்து மக்கள் வாழ்வதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அபுதாபியில் இந்துக்களுக்கான கோவில் இல்லை என்ற நிலையில் அங்கு கோவில் அமைக்க இந்திய பிரதமர் நரேந்திர மோடி அபுதாபி இளவரசரிடம் கோரிக்கை வைத்தார்.

இதனை ஏற்றுக்கொண்ட அபுதாபி அரசு அதற்கான நிலத்தை ஒதுக்கீடு செய்து ஒப்புதல் வழங்கியது. அதன்படி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலத்தில் கட்டிடப்பணி தொடங்கி தொடர்ந்து  நடைபெற்று வருகிறது..

இதற்காக இத்தாலியிலிருந்து மார்பிள்களையும், ராஜஸ்தான், குஜராத் பகுதிகளிலிருந்து கற்களையும் கொண்டு வர உள்ளனர்.

இந்த கோவில் குறிப்பிட்ட கடவுளுக்காக கட்டப்படுவதாக இல்லாமல் இந்து மத பாரம்பரியங்கள், கதைகளை உலகிற்கு சொல்லும் விதமாக கட்டப்பட உள்ளது. இந்திய மரபுப்படி கட்டி, அதன் சுவர்களில் மஹாபாரதம், ராமயணம் இதிகாச காட்சிகளை அமைக்க உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது..

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter