Home » அதிரை நீர் நிலைகைளின் தாகம் தீர்க்க வேண்டும் !

அதிரை நீர் நிலைகைளின் தாகம் தீர்க்க வேண்டும் !

by
0 comment
கோப்பு படம்.

நீநிபவுக்கு மக்கள் வேண்டுகோள் !!

சமூக ஆர்வலர்களின் சங்கமமாய் உதித்த நீர்நிலை பாதுகாப்பு அறக்கட்டளை பல்வேறு பணிகளை சிறப்புடன் செய்து வருகின்றனர்.

கடந்த ஆண்டு இந்த மாதங்கள் வரையிலும் ஆற்று  நீரின் உரிய பங்கினை அதிகாரிகளை அனுகி பெற்று நமதூர் நிலைகள் நிரம்ப வழிவகுத்தவர்கள் இந்த  நீர் நிலை பாதுகாப்பு அறக்கட்டளையினர்.

அற்பணிப்பு மனப்பான்மையுடன் சொந்த உழைப்பையும் விடுத்து முக்கியத்துவம் வாய்ந்த இப்பணியை செம்மையாக செய்த அவ்வமைப்பினர் இவ்வாண்டு சொந்த அலுவல் காரணமாகவோ அல்லது இதர காரனங்களுக்காகவோ இப்பணியை அவர்களால் தொடர்ந்திட இயலவில்லை.

இதனிடையே பல்வேறு முஹல்லாக்களை சார்ந்த சமூக ஆர்வமுள்ள இளைஞர்கள் ஒன்றினைந்து வாட்ஸ் ஆப் குழுவமைத்து இதற்க்காக முயறச்சிகள் மேற்கொண்டாலும்,போதிய வழிகாட்டுதலின்றி இப்பணியில் அதீத தொய்வு ஏற்பட்டு விட்டன.

எனவே அதிரை நீர் நிலை பாதுகாப்பு அறக்கட்டளை நிர்வாகிகள் போர்கால அடிப்படையில் ஒன்றிணைந்து நீர் நிலைகளை நிரப்புவதுடன் இப்பணியில் ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு போதிய பயிற்சியுடன் கூடிய ஒத்துழைப்பை நீர் நிலை பாதுகாப்பு அறக்கட்டளையினர் செய்து கொடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.

ஆர்வமிக்க பணிகளை மேற்கொள்ள அதிரை எக்ஸ்பிரஸ் ஊடக ரிதியிலான அனைத்து ஒத்துழைப்பையும் என்றும் நல்கும் என்ற உத்திரவாத்தை வழங்குவதில் பெருமை கொள்கிறது.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter