அதிரை எக்ஸ்பிரஸ்:- தஞ்சாவூர் மாவட்டம்,மல்லிப்பட்டினம் ஊராட்சியில்,ECR சாலைகளில் மீன் கழிவுகள் கொட்டுவதை தடுக்க பொதுமக்கள் கோரிக்கை.
தஞ்சை மாவட்டத்திலேயே மல்லிப்பட்டிணம் கடல்சார்ந்த மீன்,இறால்,நண்டு போன்ற உணவுப் பொருட்களை அதிகளவில் ஏற்றுமதி செய்யக் கூடிய பகுதியாகும்.இங்கு வெளிமாநிலங்கள் மற்றும் அயல்நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றனர்.
இந்த பகுதிகளில் வெளிமாநில மற்றும் பக்கத்து துறைமுகங்கள்,ஊர்களில் இருந்து வரக்கூடிய மீன் லோடு லாரிகள் வண்டியினுள் இருக்கும் கழிவுகளை மல்லிப்பட்டிணம் ECR சாலையில் மக்கள் நடமாடக்கூடிய பகுதிகளில் கொட்டிவிடுகின்றன.இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது.இதன் காரணமாக அந்த வழியை பயன்படுத்தும் மக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகின்றனர். மேலும் நோய்தொற்று பரவும் அபாயம் இருப்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை ஊராட்சி நிர்வாகம் கண்டிப்புடன் செயல்படுத்த வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக இருக்கிறது.