42
சென்னையில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில் சென்னை அண்ணாசாலையில் மழை வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. வங்கக் கடலில் மையம் கொண்ட காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி தற்போது நிவர் புயலாக வலுப்பெற்றுள்ளது.
இப்புயலானது மாமல்லபுரம்-காரைக்கால் இடையே கரையை கடக்க உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.
இந்நிலையில் சென்னையில் பெய்து வரும் கனமழையால் அண்ணா சாலையில் ஆறுபோல் காட்சியளிக்கிறது. இதன் எதிரொலியாக சென்னை அண்ணா சாலையில் உள்ள செய்யது மூசா ஷா காதிரி ஒளியுல்லாஹ் தர்காவின் மேல் கூரை இடிந்து விழுந்து தர்கா சேதமடைந்துள்ளது. அத்துடன் அங்கு பலத்த காற்று வீசி வருவதால் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.