Home » CYCLONE NIVAR : `ECR சாலைக்கு சீல்’ – இருசக்கர வாகனங்கள் செல்லவும் தடை !

CYCLONE NIVAR : `ECR சாலைக்கு சீல்’ – இருசக்கர வாகனங்கள் செல்லவும் தடை !

0 comment

வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள நிவர் புயல், அதி தீவிரப் புயலாக இன்று இரவு புதுச்சேரிக்கு அருகே கரையைக் கடக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் பரவலாகக் கனமழை பெய்து வருகிறது. இதனால், தமிழகம், புதுவையில் சென்னை உள்ளிட்ட 15 மாவட்டங்களில் அதி தீவிர கனமழை பெய்யலாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழகம், புதுச்சேரி அரசுகள் முடுக்கிவிட்டுள்ளன. தாழ்வான இடங்களில் வசிப்போர் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை – புதுச்சேரி இடையிலான கிழக்குக் கடற்கரை சாலை சீல் வைக்கப்பட்டிருக்கிறது. நிவர் புயல் காரணமாக கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள மீனவ கிராமங்களில் கடல் அலை கடுமையான சீற்றத்துடன் வீசத் தொடங்கியிருக்கிறது. இதனால் கிழக்கு கடற்கரை சாலையில் வாகனப் போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டுள்ளது.

கிழக்குக் கடற்கரை சாலை வழியாக வாகனங்கள் செல்லக்கூடாது என விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டிருக்கிறார். இதனால் விழுப்புரம் மாவட்ட எல்லையான கீழ்புத்துப்பட்டு பகுதியிலேயே வாகனங்கள் தடுத்து நிறுத்தப்படு அய்யனார் கோயில், ஒழிந்தாயாப்பட்டு வழியாக திண்டிவனம் சாலைக்கு மாற்றி விடப்படுகிறது. அதே போல் புதுச்சேரியில் இருந்து கோட்டக்குப்பம் வழியாக வரும் வாகனங்களும் அனுமதிக்கப்படவில்லை.

இருசக்கர வாகனங்கள் கூட கிழக்கு கடற்கரை சாலை வழியாக செல்ல கூடாது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கிழக்கு கடற்கரை சாலையை ஒட்டி கடலோரப் பகுதியில் உள்ளதால் கடல் சீற்றத்தின் காரணமாக பாதிக்கப்படக்கூடும் என்பதை ஒட்டி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter