53
வங்கக்கடலில் உருவான நிவர் புயல், அதி தீவிர புயலாக இன்று இரவு 8 மணிக்கு மேல் புதுச்சேரி அருகே கரையை கடக்க உள்ளது. இதனால் கடலூர், செங்கல்பட்டு, புதுச்சேரி, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த சூறைக்காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில் இன்று இரவு 10 மணிக்கு மேல் மற்ற மாவட்ட மக்கள் சென்னைக்குள் வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி சென்னையின் பிரதான சாலைகள் அனைத்தும் மூடப்பட்டு, மக்கள் வீடுகளை விட்டு வெளியில் வரவேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளனர். மறுஅறிவிப்பு வரும் வரை மக்கள் யாரும் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மேலும் சென்னை விமான நிலையம் நாளை காலை வரை மூடப்பட்டு, மெட்ரோ ரயில் சேவையும் நிறுத்தப்பட்டுள்ளது.