Home » பணப்பரிமாற்றத்துக்கு கட்டணமா ? – கூகுள் பே விளக்கம் !

பணப்பரிமாற்றத்துக்கு கட்டணமா ? – கூகுள் பே விளக்கம் !

0 comment

கூகுள் பே செயலியில் பணப் பரிமாற்றத்துக்கான கட்டணம் என்று அறிவிக்கப்பட்டது அமெரிக்காவில் மட்டுமே என்றும், இந்தியாவில் அப்படி எந்தக் கட்டணமும் வசூலிக்கப்படாது என்றும் அந்நிறுவனம் தெளிவுபடுத்தியுள்ளது.

சமீபத்தில் கூகுள் பே இணையதளத்தில், ஜனவரி மாதம் முதல் தளம் செயல்படாது என்று அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் பணப் பரிமாற்றத்துக்குக் கட்டணம் விதிக்கப்போவதாகவும் பல ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. இதனால் கூகுள் பேவை இனி பயன்படுத்த வேண்டுமா என இந்தியப் பயனர்கள் இடையே கேள்வி எழுந்தது.

ஆனால் தற்போது கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தக் கட்டணங்கள் எல்லாம் அமெரிக்காவில் மட்டுமே. இந்தியாவில் கூகுள் பே மற்றும் வியாபாரங்களுக்கான கூகுள் பே செயலிகளில் கிடையாது. மேலும் முதன் முதலில் அமெரிக்காவில் அறிமுகம் செய்யப்பட்ட இணையதளம் சார்ந்த கூகுள் பே வசதி தான் ஜனவரி மாதம் முதல் செயல்படாது. எனவே அவர்கள் புதிய கூகுள் பே செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் வங்கிக் கணக்கிலிருந்து பணப் பரிமாற்றத்துக்குக் கட்டணம் கிடையாது. ஆனால் இந்தப் பரிமாற்றம் நடக்க 1-3 நாட்கள் வரை ஆகும். அதே நேரம் டெபிட் கார்டுகள் மூலம் உடனடியாக பணப் பரிமாற்றம் செய்யப்படும். இதற்கு 1.5 சதவிதம் வரை கட்டணம் வசூலிக்கப்படும் என்று கூகுள் பே அறிவித்துள்ளது.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter