தஞ்சை மாவட்டம்,அதிராம்பட்டினம் அருகே கீழத்தோட்டம் பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு உணவு பொட்டலங்கள் மற்றும் மாஸ்க் ஆகியவைகளை காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மை துறை தலைவர் நாகூர் கனி தலைமையில் வழங்கினர்.
நிவர் புயல் எச்சரிக்கை காரணமாக கடந்த சில நாட்களாக மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.இதனால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் பெரிதும் கஷ்டப்பட்டனர்.இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மை துறை சார்பில் உணவு பொட்டலங்கள் மற்றும் மாஸ்க் ஆகியவற்றை வழங்கி ஆறுதல் கூறினர். மல்லிப்பட்டினம் நகர தலைவர் முகமது அப்துல் காதர்,வட்டார ஒருங்கிணைப்பாளர் அப்துல் அஜீஸ்,வட்டார செயலாளர் அப்துல் சுகுது ,பீர் முகமது ஜுல்பிஹார் அலி சுல்தான் ஆகியோர் கலந்து கொண்டனர்.