Home » திருவாரூரில் ரயில்நிலைய முற்றுகை போராட்டம் நடத்திய மமக-வினர் கைது !(படங்கள்)

திருவாரூரில் ரயில்நிலைய முற்றுகை போராட்டம் நடத்திய மமக-வினர் கைது !(படங்கள்)

0 comment

மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி டெல்லி சலோ என்ற பெயரில் பல லட்சம் விவசாயிகள் டெல்லிக்குள் நுழையும் போராட்டத்தை கடந்த 7 நாட்களாக நடத்தி வருகின்றனர். கடுங்குளிரையும் பொருட்படுத்தாது இரவு பகல் பாராமல் விவசாயிகள் போராடி வருகின்றனர்.

இந்நிலையில் டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், மனிதநேய மக்கள் கட்சியின் விவசாய அணி சார்பில் மாபெரும் இரயில் நிலைய முற்றுகை போராட்டம் இன்று புதன்கிழமை காலை நடைபெற்றது.

டெல்லியில் விவசாயிகளை பயங்கரவாதிகளாக நடத்தும் பாஜக அரசை கண்டித்தும், போராடும் விவசாயிகளிடம் நிபந்தனையற்ற பேச்சுவார்த்தை நடத்த வலியுறுத்தியும், விவசாயிகளை கார்ப்பரேட் கம்பெனிக்கு அடிமையாக்கும் மூன்று வேளாண் சட்டைகளை உடனே திரும்ப பெற வேண்டும் என்ற மூன்று கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ரயில் நிலைய முற்றுகை போராட்டம் நடைபெற்றது. இந்த முற்றுகை போராட்டம் மனிதநேய மக்கள் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் ப. அப்துல் சமது அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இந்த முற்றுகை போராட்டத்துக்கு மாநில அமைப்பு செயலாளர் தஞ்சை I.M. பாதுஷா, மாநில செயலாளர் காரைக்கால் அப்துல் ரஹீம், மாநில விவசாய அணி செயலாளர் H.M.D. ரஹ்மத்துல்லாஹ், தலைமை பிரதிநிதி வெங்கலம் A.ஜபருல்லாஹ், விவசாய அணி மாநில பொருளாளர் O.S. இப்ராஹிம் தமுமுக மமக மாவட்ட தலைவர் M. முஜிபுர் ரஹ்மான், தமுமுக மாவட்ட செயலாளர் H. நவாஸ்,மமக மாவட்ட செயலாளர் குத்புதீன், விவசாய அணி மாவட்ட செயலாளர் குத்புதீன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

இதில் மமக-வின் டெல்டா மாவட்ட தலைவர்கள், மாவட்ட துணை நிர்வாகிகள், அணி நிர்வாகிகள்,நகர ஒன்றிய கிளை நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter