54
தஞ்சாவூர் மாவட்டம்,மல்லிப்பட்டிணம் வடக்குதெரு,காசிம் அப்பா தெரு ஆகிய பகுதிகளில் தெருவிளக்குகள் எரிவதில்லை என பொதுமக்கள் குற்றச்சாட்டு.
கடந்த பதினைந்து நாட்களுக்கு மேலாக இரவு நேரங்களில் தெருவிளக்குகள் எரிவதில்லை என்றும்,இரவில் வெளியே செல்ல முடியாத நிலை இருப்பதாகவும், இகடந்த சிலநாட்களாக ஆங்காங்கே தெருப்பகுதியில் இருள்சூழ்ந்து காணப்படுவதால் தேங்கி நிற்கும் மழை நீரை கடந்து செல்ல பொதுமக்கள் அச்சப்படுவதாகவும் கூறினர்.மேலும் இதுகுறித்து வார்டு உறுப்பினரிடம் புகார் அளித்த போதும் எந்தவித நடவடிக்கைகளும் எடுக்கப்பட வில்லை என பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
ஆகவே உடனடியாக வடக்குத்தெரு,காசிம் அப்பா தெரு பகுதிகளில் தெருவிளக்குகளை சரிசெய்திட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.