மத்திய அரசின் புதிய வேளாண் சட்டத்தை எதிர்த்து உத்தரப்பிரதேசம், பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் 10வது நாளாக தொடர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரியும், சட்டங்களுக்கு எதிராக டெல்லியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் திமுக சார்பில் தமிழகம் முழுவதும் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அந்தந்த மாவட்ட செயலாளர்கள் மற்றும் திமுகவின் முதன்மை கழக நிர்வாகிகள் தலைமையில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். சேலம் எருமபாளயத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பங்கேற்று கண்டன உரை ஆற்றினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது திமுக-வினர் கையில் கருப்புக்கொடியேந்தி, விவசாயிகளுக்கு எதிராக துரோகம் செய்யும் மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.

















