தமிழகத்தில் டிசம்பர் மாதம் நல்ல மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் அது சார்ந்த வதந்திகள் சமூக ஊடகங்களின் வாயிலாக பரப்பப்பட்டு வருகிறது.
இதனை கருத்தில் கொண்ட பேரிடர் மீட்பு மேலான்மை வாரியம் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் சுனாமி மீட்பு பயிற்சி வழங்கி வருகிறது.
அதன்படி தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் அருகிலுள்ள கொள்ளுக்காடு கிராமத்திலும், சேதுபாவாசத்திரம் ஆகிய இரண்டு இடங்களில் நடத்த திட்டமிட்டு அட்டவணையை தயாரித்து செயல்படுத்தி வருகிறது.
அதன் முதல் பகுதியாக சென்னையில் இந்நிகழ்வு தொடங்கியது, இதில் ஏராளமான பொதுமக்கள் ஆர்வமுடன் கலந்துகொண்டு பயிற்சி பெற்றனர்.