197
இன்ஜினியரிங் மாணவர்களுக்கான நடப்பு செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அண்ணா பல்கலைக் கழகம் அறிவித்துள்ளது.
இது குறித்து அண்ணா பல்கலைக் கழகம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளதாவது: இறுதியாண்டு மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகள் டிசம்பர் 14ம் தேதி நடைபெறும்.
இறுதியாண்டு மாணவர்களுக்கான தேர்வுகள் முடிந்த பின்னர் இதர மாணவர்களுக்கான தேர்வுகள் பின்னர் துவங்கும். இதுகுறித்த விரிவான அட்டவணை இணையதளத்தில் விரைவில் வெளியிடப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.