பாபரி மஸ்ஜித் நிலத்தை முஸ்லிம்களிடம் திருப்பிக் கொடுக்க கோரியும், பாபரி பள்ளியை இடித்த குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கக்கோரியும், வழிபாட்டுத் தலங்கள் சட்டம் 1991ஐ நடைமுறைப்படுத்தக்கோரியும் தஞ்சை தெற்கு மாவட்ட SDPI கட்சியின் சார்பில் அதிராம்பட்டினத்தில் இன்று பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அதிரை பேருந்து நிலையத்தில் இன்று மாலை நடைபெற்ற இந்த பெருந்திரள் ஆர்பாட்டத்திற்கு SDPI கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட பொதுச்செயலாளர் S.J. சாகுல் ஹமீது தலைமை வகித்தார். SDPI மாவட்ட துணை தலைவர் A.K. சாகுல் ஹமீது, SDPI மாவட்ட பொருளாளர் M. இதிரிஸ்கான், SDPI அதிரை நகர தலைவர் S. அஹமது அஸ்லம், SDTU தொழிற்சங்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் M. ஒளரங்கசீப், SDPI வர்த்தகர் அணி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் S. அபுல் ஹசன், பாப்புலர் ஃப்ரண்ட் தஞ்சை தெற்கு/திருவாரூர் மாவட்ட தலைவர் A. ஹாஜா அலாவுதீன், பாப்புலர் ஃப்ரண்ட் தஞ்சை தெற்கு டிவிஷன் தலைவர் U. அப்துல் ரஹ்மான், பாப்புலர் ஃப்ரண்ட் அதிரை ஏரியா தலைவர் S. ஜாவித் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
SDPI கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் M. முஹமது ரஹீஸ் வரவேற்புரை ஆற்றினார். SDPI அதிரை நகர துணை செயலாளர் C. அஹமது கண்டன கோசம் எழுப்பினார். SDPI கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் N. முஹமது புஹாரி, தமிழக வாழ்வுரிமை கட்சியின் மாநில இளைஞரணி தலைவர் J. ஜெரோன் குமார், பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியாவின் மாநில பொதுச்செயலாளர் A. முகைதீன் அப்துல் காதர் ஆகியோர் கண்டன உரை ஆற்றினர்.
இறுதியாக SDPI கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் L. முகமது அஸ்கர் நன்றியுரை ஆற்றினார். இப்பெருந்திரள் ஆர்ப்பாட்டத்தில் ஆண்கள், பெண்கள் என 1500க்கும் மேற்பட்டோர் பங்கேற்று கோஷங்களை எழுப்பினர்.










