வாக்குப்பதிவு எந்திரங்களில் முறைகேடு செய்து வாக்கு எண்ணிக்கையின் போது முடிவை தங்களுக்கு சாதமாக மாற்றிக் கொள்ள மத்திய பாஜக அரசு முயற்சித்து வெற்றிகண்டு வருகிறது.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டசபைக்கைகான தேர்தல் முன்னெடுப்புகளை மாநில தேர்தல் ஆனையம் முனைப்புடன் செய்து வருகிறது.
இந்த நிலையில் ஒட்டுமொத்த அரசு இயந்திரமும்,அரசியல் கட்சிகளும் கவனத்தில் கொள்ளும் வகையிலான போராட்ட வியூகங்களை உருவாக்கி கொண்டு தேர்தல் ஆனையத்தின்,செவிட்டு காதுகளுக்கும்,குருடான அரசியல் குருடர்களுக்கும் உரைக்கும் வகையிலான ஒரு போராட்டத்தை வருகிற 11 ஆம் தேதி மாலையில் அதிராம்பட்டினத்தில் ஆரம்பம்மாகிறது.

இந்த அற வழி போராட்டத்தில் ஜனநாயகத்தின் நம்பிக்கை கொண்டுள்ள களப்பணியாளர்கள் கலந்துக்கொண்டு அரசுக்கும்,ஆனையத்திற்கும் தமது கண்டனத்தை பதிவு செய்ய உள்ளனர்.
இதுகுறித்து போராட்டத்தின் ஒருங்கிணப்பாளர் ஜியாவுதீன் எம்மிடம் கூறுகையில், வளர்ந்த நாடுகள் கூட வாக்கு சீட்டு முறையில் தேர்தல் நடத்தி வரும் இன்றைய சூழலில் எந்திர வாக்கு முறை எதற்காக? எனவும், நமது ஜனநாயகத்திற்கு சவால் விடுக்கும் எந்தவொரு சந்தேகத்திற்கும் இடம் தரக்கூடாது என்றும் மக்கள் அளித்த வாக்குகள் மற்றும் தீர்ப்புக்கள் புனிதமானவை என தெரிவித்தார்.
நிலவி வரும் வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு செய்யலாம் என்ற குற்றச்சாட்டை தேர்தல் ஆணையம் தீர்த்து வைக்க வேண்டும் எனவும் மேலும் அவர் தெரிவித்தார்.
இப்போராட்டத்தில் குடும்பம் சகிதமாக கலந்துக்கொண்டு தமது கண்டனத்தை பதிவு செய்ய அனைவரும் தவறாது கலந்துக்கொள்ள வேண்டும் என அழைப்பு விடுக்கிறார்.