தஞ்சை மாவட்டம், சேதுபாவாசத்திரம் அருகே பூக்கொல்லையில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தியின் பிறந்தநாளை கொண்டாடினர்.
நிகழ்ச்சியில் வட்டார காங்கிரஸ் தலைவர் ஷேக் இப்ராகிம் சா தலைமை தாங்கினார். தஞ்சை தெற்கு மாவட்ட பொதுச்செயலாளர் A.கமால் பாஷா முன்னிலை வகித்தார் சோனியா காந்தியின் பிறந்தநாளையொட்டி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி உற்சாகமாக கொண்டாடினர்.
இதில் இளைஞர் காங்கிரஸ் தஞ்சை தெற்கு மாவட்ட துணை தலைவர் KMA.நூருல் அமீன், தெற்கு வட்டார தலைவர் கணேசன், மல்லிப்பட்டினம் நகர தலைவர் M.அப்துல் ஜப்பார், கணபதி, ஞானசேகரன் ஆகியோரும் சர்வகட்சி நண்பர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.