மத்திய அரசு கொண்டுவந்துள்ள 3 வேளான் திருத்த சட்டத்தை வாபஸ் வாங்கும் வரை டெல்லியில் கோடிகணக்கான விவசாயிகள் ஒன்றுகூடி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இப்போரட்டத்திற்கு வழு சேர்க்கும் விதமாக இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் போராட்டம் வெடித்துள்ளது. அதன் ஒருபகுதியாக பட்டுக்கோட்டை அஞ்சல் நிலையம் அருகே தமிழக மக்கள் விடுதலை இயக்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட தங்க குமரவேல் கண்டன உரை நிகழ்த்தினார், அப்போது தமிழக அரசு விவசாயிகளின் நலனில் விஷத்தை பாய்ச்சிகின்றன கொடிய சட்டத்தை எதிர்க்க வேண்டும் எனவும், இச்சட்டத்தினால் விவசாயிகள் மட்டுமல்லாது ஒட்டுமொத்த இந்தியர்களும் பாதிக்க கூடிய இச்சட்டத்தை நீக்க அரசு முன்வர வேண்டும் என தெரிவித்தார்.

குறுகிய கால அடிப்படையில் இத்திட்டம் வாபஸ் பெற அரசு நடவடிக்கைகளை மேற் கொள்ளவில்லை எனில் தமிழக விவசாயிகள் டெல்லிக்கு செல்லவும் தயங்க மாட்டார்கள் என எச்சரிக்கை விடுத்தார்.
இப்போராட்டத்தில் நாம் மனிதர் கட்சியின் மாவட்ட செயலாளர் சரபுதீன், தமிழக மின்னனு வாக்கு இயந்திர எதிர்ப்பு ஒருங்கிணைப்பாளர் ஜியாவுதீன் உள்ளிட்ட பல்வேறு அரசியல் அமைப்பின் தலைவர்கள் கலந்துக் கொண்டு கண்டன உரை நிகழ்த்தினார்கள்.