Home » கர்நாடகா : பலமாதமாக சம்பளம் வழங்காத ஐபோன் தயாரிக்கும் ஆலையை சூறையாடிய ஊழியர்கள் !

கர்நாடகா : பலமாதமாக சம்பளம் வழங்காத ஐபோன் தயாரிக்கும் ஆலையை சூறையாடிய ஊழியர்கள் !

0 comment

தைவான் நாட்டை தலைமையிடமாக கொண்ட ஐபோன் தயாரிக்கும் விஸ்ட்ரான் நிறுவனம், கர்நாடகா மாநிலம் கோலார் மாவட்டத்தில் இயங்கி வருகிறது. சுமார் 3,000 ஊழியர்கள் இந்த செல்போன் உதிரி பாகங்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் கடந்த நான்கு மாதங்களாக இந்த நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை.

இதனால் நேற்று இரவு பணிக்கு வந்த 2000 ஊழியர்கள் பணி முடிந்த இன்று காலை ஊதியம் வழங்க கோரி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை அடுத்து ஊழியர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பவில்லை என்றால் அனைவரையும் பணி நீக்கம் செய்து விடுவோம் என விஸ்ட்ரான் நிறுவனம் எச்சரிக்கை விடுத்தது.

இதனை அடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கோலார் காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்களை தடியடி நடத்தி கலைத்தனர். மேலும் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்காதது குறித்து நிறுவனத்திடம் விளக்கம் கேட்டு உள்ளனர்.

இபோன் உதிரி பாகம் தயாரிக்கும் இந்த விஸ்ட்ரான் நிறுவனம் தங்களது நிறுவனத்தை பெங்களூரில் விரிவாக்கம் செய்து 10 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்க உள்ளதாக அறிவித்து இருந்த நிலையில் தற்போது ஊதிய பிரச்சினை பெரும் சர்ச்சையாக மாறியுள்ளது.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter