தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் புதுமனைத் தெருவில் உள்ள வீட்டில் இருந்த இருசக்கர வாகனம் திருட்டு போய் உள்ளது.
அதிராம்பட்டிணம் புதுமனைத்தெருவை சேர்ந்தவர் மாலிக்.இவர் கடந்த இருநாட்களுக்கு முன் தன்னுடைய விலை உயர்ந்த ROYAL ENFIELD வெள்ளை நிறம் கொண்ட, TN49 BY 9798 பதிவெண் கொண்ட இரு சக்கர வாகனத்தை வீட்டில் பூட்டிவிட்டு தூங்க சென்றுள்ளார்.
காலையில் எழுந்து வாகனத்தை பார்க்கையில் இருசக்கர வாகனத்தை காணவில்லை,இதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.நாலா புறங்களிலும் தேடிப்பார்த்துள்ளார்.கிடைக்காததால் அதிராம்பட்டிணம் போலீஸாரிடம் புகார் கொடுத்துள்ளார். ஆனால் இதுவரை காவல்துறையினர் எந்தவித வழக்கும் பதிவு செய்யவில்லை.காவல் அதிகாரிகளின் அலட்சியப்போக்கால் அதிரை பகுதிகளில் தொடர்ந்து கொள்ளை சம்பவங்களும்,திருட்டு முயற்சிகளும் தொடர்ந்து அதிகரித்த வண்ணமே இருக்கின்றன. இதனால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.