மரண அறிவிப்பு : கடற்கரைத்தெருவைச் சேர்ந்த 3-ம் நம்பர் என்கின்ற மர்ஹூம் முகமது இஸ்மாயில் அவர்களின் மகளும், மர்ஹூம் P.S.M. முகம்மது மொய்தீன் அவர்களின் மனைவியும், மர்ஹூம் முகம்மது இப்ராஹீம் அவர்களின் சகோதரியும், சாகுல் ஹமீது, ஹாஜா இஸ்மாயில், ஹபீப் ரஹ்மான், ராயல் சைக்கிள் கம்பேனி புருகான்நூர்தீன் ஆகியோரின் தாயாரும், அஹமது அனஸ், சுல்தான் ஆகியோரின் பெரிய தாயாருமாகிய ஹாஜிமா. உம்முஸல்மா அவர்கள் இன்று பகல் 1.30 மணியளவில் அவர்களின் இல்லத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று மாலை மஹ்ரிப் தொழுகைக்கு பிறகு கடற்கரைத்தெரு ஜுமுஆ பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.