170
தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னமும் 6 மாதங்களே உள்ளன. இந்த நிலையில் அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் சின்னங்களை ஒதுக்கீடு செய்துள்ளது.
இதனடிப்படையில் தமிழகம், புதுவையில் நாம் தமிழர் கட்சிக்கு ஏற்கனவே கொடுக்கப்பட்ட விவசாயி சின்னமே மீண்டும் ஒதுக்கப்பட்டுள்ளது. டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்துக்கும் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் கொடுக்கப்பட்ட பிரஷர் குக்கர் சின்னமே ஒதுக்கப்பட்டுள்ளது.
கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு புதுவையில் மட்டும் பேட்டரி டார்ச் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு எந்த ஒரு சின்னமும் ஒதுக்கப்படவில்லை.