Home » அதிரையில் ஒற்றுமைக்கு வேட்டு! பாஜகவின் திட்டத்தை செயலாக்க துடிக்கும் அரசியல்வாதிகள்! அம்பலமானது உண்மைமுகம்!!

அதிரையில் ஒற்றுமைக்கு வேட்டு! பாஜகவின் திட்டத்தை செயலாக்க துடிக்கும் அரசியல்வாதிகள்! அம்பலமானது உண்மைமுகம்!!

by அதிரை இடி
0 comment

அதிரையில் நூற்றாண்டை கடந்து இஸ்லாமியர்களை ஒருங்கிணைத்து செயல்படுவதில் சம்சுல் இஸ்லாம் சங்கத்திற்கு தனி இடம் உண்டு. இந்நிலையில் சம்சுல் இஸ்லாம் சங்கத்தை ஒழித்துக்கட்ட வேண்டும் என்ற நோக்கில் ஆளும், எதிர் கட்சிகளை சேர்ந்த சில அரசியல்வாதிகள் கங்கனம் கட்டிக்கொண்டு திரிவது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

கட்சி ரீதியில் வெவ்வேறு கொள்கைகளை கொண்டிருந்தபோதும், சம்சுல் இஸ்லாம் சங்க எதிர்ப்பு என வரும்போது அவர்கள் அனைவரும் ஓரணியில் திரண்டிருப்பது ஆச்சரியமான உண்மை. இந்திய தேசத்தில் வாழும் முஸ்லீம் சமூகத்தின் உரிமையை எப்படியாவது பறித்து அரசியல் அனாதையாக மாற்றிவிட வேண்டும் என்று மத்திய பாஜக அரசு முயற்சித்து வரும் சூழலில், நூற்றாண்டை கடந்த சம்சுல் இஸ்லாம் சங்கத்தை சிதைத்து முஸ்லீம் ஒற்றுமையை அதிரையில் இல்லாமலாக்கும் பணியை முழு வீச்சில் அந்த கூட்டு சேர்ந்த அரசியல்வாதிகள் செய்து வருகின்றனர்.

அதன் ஒருபகுதியாக பதிவுத்துறைக்கு சம்சுல் இஸ்லாம் சங்கம் குறித்து புகார் அளித்து இருக்கிறார்கள். தற்போது இந்த தகவல் வெளியாகி அதிரையர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. ஆட்டை கடித்து மாட்டை கடித்து கடைசியில் ஒற்றுமைக்கே வேட்டு வைக்க துணிந்த இந்த கேடுகெட்ட அரசியல்வாதிகளை இனம்கண்டு ஓரங்கட்டிவிட வேண்டும் என்பதே பலரது கருத்தாக உள்ளது.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter