Friday, June 14, 2024

வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு – தஞ்சையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கண்டன ஆர்ப்பாட்டம் !(படங்கள்)

Share post:

Date:

- Advertisement -

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் திருத்த சட்டத்திற்கு எதிராகவும், அதனை திரும்ப பெற கோரியும் தமிழகம் முழுவதும் நேற்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அதன் ஒரு பகுதியாக தஞ்சையிலும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினர் வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தஞ்சை ரயில் நிலையம் அருகே நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் ராஜிக் முகம்மது தலைமை வகித்தார். இதில் மாவட்ட நிர்வாகிகள் வல்லம் ஜாபர், ஹாஜா ஜியாவுதீன், அப்துல்லாஹ், பாவா, வல்லம் அப்துல்லாஹ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் மாநில பொருளாளர் அப்துல் ரஹீம் கண்டன உரை ஆற்றினார். அப்போது அவர் பேசியதாவது : மத்திய அரசு பொறுப்பு ஏற்றது முதல் அரசின் பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பனை செய்து வருவதை நாம் அனைவரும் அறிவோம்.
மக்கள் விரோத சட்டங்களை நிறைவேற்றுவதில் மட்டும் கவனம் செலுத்திவரும் மத்திய மோடி அரசு கொரோனா பேரிடர் நேரத்தில் அவசர அவசரமாக விவசாய வேளாண் மசோதா சட்டத்தில் திருத்தம் செய்து விவசாயிகளின் வயிற்றில் அடித்துள்ளது.
இந்த சட்ட திருத்தத்தில் அரிசி, பருப்பு, எண்ணெய், வெங்காயம், உருளைக்கிழங்கு உள்ளிட்ட உணவு பொருட்களை அத்தியாவசிய பட்டியலில் இருந்து நீக்கிவிட்டது.
விவசாயிகளிடம் இருந்து விவசாய பொருட்களை கொள்முதல் செய்யும் அரசு இனி தனியார்களிடம் விற்க வேண்டும் என்றும் சட்ட திருத்தம் செய்துள்ளது.
இதனால் உணவு பொருட்களை பதுக்கி செயற்கையான தட்டுப்பாடுகளை செய்ய முடியும். இதன் காரணமாக உணவு பொருட்கள் கடும் விலை ஏற்றம் ஏற்பட்டு ஏழை எளிய மக்கள் பாதிக்கப்படுவார்கள்.
விவசாய பொருட்களை தனியாரிடம் விற்கும் போது விவசாயிகள் பாதிக்கப்படுவதோடு விவசாய நிலங்களில் என்ன பொருள் விலை விக்க வேண்டும் என்பதை தனியார்களே தீர்மானிக்கும் நிலை ஏற்படும்.
விவசாய நிலங்கள் மொத்தமாக கார்ப்பரேட்களின் கட்டுப்பாட்டுக்கு செல்லும்.
விவசாயத்திற்காக வழங்கப்படும் இலவச மின்சாரம் ரத்து செய்யப்படும்.
உரம், விவசாய பொருட்களுக்கான மானியம் இனி கிடைக்காது. விவசாயத்தை அழித்து ஒழிக்கும் இந்த சட்டத்தை இந்தியர்கள் அனைவரும் எதிர்த்து குரல் கொடுப்போம். விவசாயம் காப்போம். இவ்வாறு அவர் பேசினார்.

இறுதியாக மாவட்ட பொருளாளர் அஷ்ரப் அலி நன்றியுரை ஆற்றினார். இந்த கண்டன ஆர்பாட்டத்தில் பெண்கள், குழந்தைகள் என 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்று கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

89.5% வாக்குகளை பெற்ற திமுக! உதயநிதியிடம் வாழ்த்து பெற்றார் S.H.அஸ்லம்!!

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40...

பயன்பாட்டிற்கு வருகிறது திருச்சி புதிய பன்னாட்டு விமான முனையம்…!!

திருச்சி புதிய  பன்னாட்டு விமான நிலையத்தை கடந்த ஜனவரி 2ஆம் தேதியன்று...

மரண அறிவிப்பு:- நைனா முகமது அவர்கள்..!!

மரண அறிவிப்பு:- மேலத்தெருவை சேர்ந்த மர்ஹும் (கோவரச) என்கின்ற ஷேக் தாவுது அவர்களின்...

முஸ்லீம் லீக் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு – தஞ்சை மாவட்ட முஸ்லீம் லீக் தலைவர் வாழ்த்து.

மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று இன்று வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. இதில்...