தஞ்சாவூர் மாவட்டம்,ஆண்டிக்காடு ஊராட்சி காசிம் அப்பா தெரு பகுதியில் தேங்கியுள்ள குப்பைகளை ஜேசிபி இயந்திரம் மற்றும் டிராக்டர் உதவியுடன் அகற்றினர்.
காசிம் அப்பா தெரு குடியிருப்பு பகுதிகளுக்குள் தேங்கி இருந்த குப்பைகளை அகற்ற பொதுமக்கள் கோரிக்கைவிடுத்தனர்.கோரிக்கையை ஏற்றுக்கொண்ட ஆண்டிக்காடு ஊராட்சி மன்றத்தலைவர் வரதராஜன் உத்தரவின்பேரில் அப்பகுதியில் குப்பைகள் அகற்றப்பட்டது.மேலும் ஈசிஆர் சாலையில் உள்ள குப்பைகளையும் அகற்றினர்.மேலும் குடியிருப்பு பகுதிகளுக்குள் குப்பைகளை போட வேண்டாம் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.