அதிராம்பட்டினத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் மாபெரும் இரத்ததான முகாம் இன்று நடைபெற்றது.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டம் அதிரை கிளை 1, 2 மற்றும் தஞ்சை ராஜா மிராசுதார் அரசு மருத்துவமனை இணைந்து நடத்திய மாபெரும் இரத்ததான முகாம் அதிரை ஆயிஷா அரங்கத்தில் நடைபெற்றது.
இந்த முகாமிற்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் கே. ராஜிக் முகமது தலைமை வகித்தார். மாவட்ட மருத்துவரணி செயலாளர் ஹாஜா ஜியாவுதீன், மாவட்ட பொருளாளர் அஷ்ரப் அலி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் இதில் அதிரை கிளைகளின் நிர்வாகிகள் பங்கேற்றனர். சிறப்பு அழைப்பாளராக டாக்டர். ஷேக் அலி கலந்துகொண்டார்.
இம்முகாமில் 100க்கும் மேற்பட்ட மக்கள் பங்கேற்று இரத்ததானம் செய்தனர். இதன்மூலம் 51 யூனிட் ரத்தம், தஞ்சை ராஜா மிராசுதார் அரசு மருத்துவமனைக்கு வழங்கப்பட்டது. இந்த முகாமிற்கான ஏற்பாடுகளை அதிரை மாணவரணி மற்றும் மருத்துவ அணியினர் செய்திருந்தனர்.






















