அதிரை எக்ஸ்பிரஸ்:-தஞ்சாவூர் மாவட்டம்,பட்டுக்கோட்டை தாலுக்கா அலுவலகத்தில் சனிக்கிழமை அரசு விடுமுறையை போல் எந்தவித அலுவல் பணிகளையும் செய்வதில்லை.
காரணம் கேட்டால் இன்று சனிக்கிழமை அப்படி என்று பதில் வருகிறது.
அதிகாரிகளின் அலட்சியப் போக்கால் சனிக்கிழமை தங்களுடைய கோரிக்கைகளையும்,விண்ணப்பங்களையும் கொண்டு வரும் அப்பாவி பொதுமக்கள் ஏமாந்து மறுபடியும் ஏமாற்றத்துடன் செல்கின்றனர். இதனை அரசு அதிகாரிகள் உடனே சரிசெய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது.