33
அதிரையில் சமீப காலமாக பைக் திருட்டுகள் அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் தங்களின் விலை உயர்ந்த இருசக்கர வாகனங்களுக்கு பாதுகாப்பு அற்ற சூழல் ஏற்பட்டுள்ளதாக கவலை தெரிவித்துள்ளனர். இந்நிலையில் அதிரை கடற்கரை தெருவில் வீட்டு வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பஜாஜ் பல்சர் பைக்கை மர்ம நபர்கள் கள்ள சாவி கொண்டு திருட முயற்சி செய்துள்ளனர். பைக் திறக்காததால் திருட்டு முயற்சியை கைவிட்டு ஓடிவிட்டனர்.