75
தஞ்சாவூர் கரந்தையை சேர்ந்த மாணவர் ரியாஸுதீன், கடந்தசில நாட்களுக்கு முன்பு உலகின் எடை குறைந்த செயற்கைகோளை வடிவமைத்து சாதனை படைத்துள்ளார்.
சாதனை மாணவன் ரியாஸுதீனை இன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்ட நிர்வாகிகள் நேரில் சென்று பாராட்டினர். மேலும் அடுத்தக்கட்ட பணிகளுக்கு உதவி தேவை என்றால் தவ்ஹீத் ஜமாஅத்தை அணுகவும் என மாவட்ட தலைவர் ராஜிக் முகமது அவர்கள் கூறி உத்வேகப்படுத்தினார்.
பின்னர் துணை செயலாளர்கள் பாவா மற்றும் ஹாஜா ஜியாவுதீன் மறுமை வாழ்க்கை குறித்து எடுத்துக்கூறினர். பின்னர் மாணவர் ரியாஸுதீனின் பணிகள் மேலும் வளர வாழ்த்துக்களை தெரிவித்தனர்.