தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் கடந்த மூன்று நாட்களாக தொடர் மழை வெளுத்து வாங்கி வருகிறது.
இந்த தொடர் கனமழையால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் சூழ்ந்து வெள்ளைக்காடாக காட்சியளிக்கிறது. குறிப்பாக மின்சார வாரிய அலுவலகம், காவல் நிலையம் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் கூட இம்மழை நீரால் சூழப்பட்டுள்ளது.
மேலும் குடியிருப்பு பகுதிகளிலும் மழைநீர் சூழந்து உள்ளதால் மக்கள் துயரத்தை சந்தித்து வருகிறார்கள். இவர்களை மீட்கும் பணியினை SDPI கட்சியினர் செய்து வருகிறார்கள். அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள், போர்வை உள்ளடக்கிய கிட் வழங்கப்பட்டு அவர்களின் தேவைகளை SDPI கட்சியினர் பூர்த்தி செய்து வருகிறார்கள்.
மேலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அதிரை மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்களை SDPI கட்சியின் மாநில செயலாளர் அபூபக்கர் சித்தீக், SDPI கட்சி தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் முஹம்மது புஹாரி மற்றும் SDPI கட்சியின் அதிரை நகர நிர்வாகிகள் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.




