நமதூரில் கடந்த சில மாதங்களாக டெங்கு காய்ச்சலின் தீவிரம் அதிகரித்து வந்த நிலையில் அதன் தாக்கத்தை குறைக்க சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், சமுதாக நலச்சங்கங்கள், இளைஞர்கள் என அனைவரும் தானாகவே முன்வந்து ஆங்காங்கே நிலவேம்பு கசாயத்தை பொது மக்களுக்கு வினியோகித்து வந்தனர்.
மேலும் ஒரு பகுதியாக சாலையில் சிதறிக் கிடக்கும் குப்பைகளுக்கென தனி குப்பைக் கூண்டுகளையும் அமைத்தனர்.
குப்பைக் கூண்டுகள் ஆங்காங்கே அமைக்கப்பட்டாலும் இதனை சமூக விரோதிகள் சிலர் சேதப்படுத்தியும் வருவது தொடர்கதையாகி வருகிறது. அவ் வகையில் நேற்றைய தினம் தக்வா பள்ளி அருகாமையில் வைக்கப்பட்டிருந்த குப்பைக் கூண்டை சமூக விரோதிகள் சிலர் சேதப்படுத்தி குப்பைகளை சாலையில் வீசிச் சென்றுள்ளனர்.
இதற்க்கு முன்னர் ஆலடிக்குளம் அருகில் வைக்கப்பட்டிருந்த குப்பை கூண்டை சமூக விரோதிகள் சிலர் தீயிட்டு எரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.