ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் வெகுவிமர்சையாக நடைபெறும். ஜல்லிக்கட்டு போட்டிகளை காண கூட்டமும் அலைமோதும். மதுரை அவனியாபுரத்தில் தை 1-ஆம் தேதி (ஜன.14) இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டாக அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நடைபெற இருக்கிறது.
இந்நிலையில், ஜனவரி 14ஆம் தேதி அவனியாபுரத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டுபோட்டியைக் காண தமிழகம் வருகிறார் காங்கிரஸ் முக்கிய தலைவர் ராகுல் காந்தி. ராகுல் காந்தியின் மதுரை வருகையை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.