அதிராம்பட்டினம் லயன்ஸ் சங்கம் சார்பாக பன்னாட்டு லயன்ஸ் சங்க நிறுவனர் மெல்வின் ஜோன்ஸின் பிறந்ததினத்தை முன்னிட்டு அதிரை பேரூராட்சி எதிரில் ஜலீலா ஜுவல்லரி வளாகத்தில் இன்று காலை ஏழைகள் 100 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் லயன்ஸ் சங்க தலைவர் அப்துல் ஜலீல், ஹாஜி. முஹம்மது முஹைதீன், ஹாஜி. அப்துல் ஹமீது, லயன் பிச்சை முத்து, மாவட்ட தலைவர்கள் சாரா அகமது, லயன் ஆறுமுகசாமி, லயன் அபூபக்கர், துணை செயலாளர் லயன் அபூபக்கர், லயன் முல்லைமதி, லயன் ஆரிப், லயன் சார்லஸ், லயன் சூப்பர் அப்துல் ரஹ்மான், லயன் மோகன்லால் உள்ளிட்ட பலர்கலந்து கொண்டனர்.