தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் பேருந்துநிலையத்தில் நோய்வாய்ப்பட்ட நிலையிலிருந்த ஆதரவற்ற முதியவரை மீட்ட தன்னார்வலர்கள் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்நிலையில் அந்த முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு சென்ற இஸ்லாமிய இளைஞர்கள் மாற்று மதத்தவரான முதியவரின் உடலை மீட்டு குளிப்பாட்டினர். இதனிடையே இரவுநேரத்தில் குழிவெட்ட ஆட்கள் கிடைக்காததால் இஸ்லாமிய இளைஞர்களே பள்ளம் தோண்டி முதியவரின் உடலை அடக்கம் செய்தனர்.