Home » தமிழ் பேசும் முஸ்லீம்களின் பாரம்பரிய உடைக்கு தடை! பட்டுக்கோட்டை லாரல் பள்ளி நிர்வாகம் அட்டூழியம்!

தமிழ் பேசும் முஸ்லீம்களின் பாரம்பரிய உடைக்கு தடை! பட்டுக்கோட்டை லாரல் பள்ளி நிர்வாகம் அட்டூழியம்!

0 comment

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள பள்ளிக்கொண்டான் கிராமத்தில் லாரல் தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த குழந்தைகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில் அந்த பள்ளியின் வளாகத்தில் சமீபத்தில் வைக்கப்பட்ட பேனர் ஒன்று பொதுமக்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. அதில் “கைலி/லுங்கி அணிந்து கொண்டு பள்ளி வளாகத்தின் உள்ளே வர அனுமதி கிடையாது” என எழுதப்பட்டிருந்தது. இதனால் தங்கள் பிள்ளைகளின் கல்வி குறித்த சந்தேகங்களை கேட்பதற்காக அந்த பள்ளிக்கு செல்லும் பொதுமக்கள் தேவையற்ற சங்கடத்திற்கு ஆளாகியுள்ளனர். ஏனெனில் தஞ்சை மாவட்டத்தை பொறுத்த வரை கைலி/லுங்கி ஆகியவை தமிழ் பேசும் முஸ்லீம்களின் பாரம்பரிய உடையாக கருதப்படுவதால் இந்த பள்ளி நிர்வாகத்தின் அறிவிப்பு பாகுபாடு கொண்டதாக இருக்கிறது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பிறப்பு, மொழி, இனம், மதம் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் பாகுபாடு கூடாது என இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 15வது அட்டவணை கூறுகிறது. இத்தகைய சூழலில் லாரல் பள்ளியின் உடை ரீதியிலான பாகுபாடு ஆங்கில அடிமை ஆட்சியை பிரதிபலிக்கும் வகையில் இருப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

கடந்த 2014 ஆம் ஆண்டு சென்னையில் உள்ள தமிழ்நாடு கிரிக்கெட் கிளப்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு வேட்டி கட்டி சென்ற காரணத்தால் அப்போதைய உயர்நீதிமன்ற நீதிபதி ஹரிபரந்தாமன், மூத்த வழக்கறிஞர்கள் ஆர். காந்தி, சுவாமிநாதன் ஆகியோருக்கு அனுமதி மறுக்கப்பட்ட விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனையடுத்து தமிழ்நாடு பொது இடங்களுக்குள் நுழைவதற்கான (ஆடை மீதான தடையை நீக்குதல்) சட்டத்தை மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அமல்படுத்தினார். இதன் மூலம் தமிழர் பண்பாட்டை பிரதிபலிக்கும் உடையான வேட்டி அல்லது இந்திய பாரம்பரிய உடை அணிந்து வருவோரை பொது இடங்களுக்கு செல்ல தடை விதிக்க முடியாது. இந்த சட்டத்தை மீறுவோர் யாராக இருந்தாலும் ஓராண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து தண்டிக்கப்படுவார்கள்.

இந்தநிலையில் உள்நோக்கத்துடன் செயல்படும் லாரல் பள்ளியின் உரிமத்தை அரசு ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter