வீட்டில் வளர்க்கப்படும் நாய் பூனை ஆடு மாடுகளை விட உயிர் பிராணிகளில் மனிதனுக்கு மிகவும் நெருக்கமானதும் பலன் தரக்கூடியதும் தொல்லை இல்லாததும் கோழிகள் ஆகும்
மேயும் கோழிகள் சூரியன் மறையும் முன்பே வளர்க்கும் எஜமான் இல்லம் வந்து கூடு அடைந்து சூரியன் உதிக்கும் முன்பே அதிகாலை எழுந்து கூவுவதின் மூலம் அவ்வாறு எழுவதே இயற்கை நியதி என்பதை கற்று தரும் உயிரினமே கோழிகள்
முட்டைகளை அடை காத்து குஞ்சு பொறித்த பின் அதன் சந்ததிகளை எவ்வாறு பொருப்புணர்வோடு கவனிக்க வேண்டும் என்பதை நடை முறை மூலம் மனித சமுதாயத்திற்க்கு வாழ்கை பாடம் நடத்தும் உயிரினமே கோழிகள்
பறப்பதற்க்கு வலிமை பெறாத உடல் அமைப்பை பெற்றுள்ள கோழிகள் கூட அதன் குஞ்சுகளை காகங்களும் கழுகுகளும் பறிக்க வரும் போது அவைகளிடம் இருந்து தனது குஞ்சுகளை காப்பாற்ற இயல்புக்கு மாற்றமாக பறக்கும் வீரியம் பெற்று அதன் குஞ்சுகளை காப்பாற்றுவது கோழிகளின் அசாத்தியமான திறமையாகும்
குஞ்சுகள் சுயமாக இரை தேடும் பக்குவத்தையும் அதற்கான உடல் வலிமையையும் பெறும் நாட்கள் வரை தனது உடல் இச்சைக்கு சேவல்களோடு தாய் கோழிகள் இணைவதும் இல்லை வழமையாய் போடும் முட்டைகளை கூட கோழிகள் இடுவதும் இல்லை
இந்த கோழிகள் மனித சமுதாயத்திற்க்கு கற்று தரும் பாடம் என்ன ?
தனது குஞ்சுகளுக்கு எவைகளின் மூலம் ஆபத்துகள் நேரிடுமோ அவைகளின் மீது எந்நேரமும் முழு கவனம் செலுத்தி எச்சரிக்கை உணர்வோடு செயல்படுவது தான் பிள்ளைகளை பெற்றெடுப்போரின் முதல் கடமை என்பதை அன்றாடம் தனது நடை முறை மூலம் நினைவு கூறி வருகிறது
ஆனால் மனித சமுதாயமோ குழந்தைகளை பெறுவதில் காட்டுகின்ற ஆர்வத்தில் கால் பகுதியை கூட அவர்களால் பெற்றெடுக்கப்பட்ட சந்ததிகளின் ஒழுக்க வாழ்வில் பாதுகாப்பில் கவனம் செலுத்துவது இல்லை
அந்நிய ஆடவர்களோடு தனது பெண் பிள்ளைகளை நட்பின் பெயரால் பழக விடுவது ஆபத்தானது என்பதை சிந்திக்காது சுதந்திரம் எனும் பெயரால் பல பெண்களும் ஆண்களும் உலகில் தரிகெட்டு நடப்பதற்க்கு அவர்களை ஈன்ற பெற்றோர்களின் அறியாமை தான் அடிப்படை காரணம்
குழந்தைகளின் உடலுக்கு எவை எல்லாம் பாதுகாப்பான உணவு என்பதை அன்றாடம் யோசிக்கும் பெற்றோர்கள் அந்த குழந்தைகளின் மானத்திற்க்கு எந்த உடைகள் பாதுகாப்பானது கண்ணியம் வாய்ந்தது என்பதை சிந்திக்க மறந்து சிறு வயதிலேயே கவர்ச்சி ஆடைகளை அணிய வைத்து அதை ரசிக்கும் பெற்றோர்கள் இன்று ஏராளம்
பொறித்த குஞ்சுகளில் ஆண் குஞ்சுகள் என்பதற்காக எந்த தாய் கோழிகளும் தனது கவனத்தை ஆண் குஞ்சுகளின் விசயத்தில் சற்று கவனத்தை குறைத்து கொள்வது இல்லை மாறாக ஆண் கோழி குஞ்சோ அல்லது பெண் கோழி குஞ்சோ அவைகளின் பாதுகாப்பில் தனது தாய்மை கடமையை எந்த கோழிகளும் மறப்பது இல்லை
ஆனால் மனித சமுதாயத்தில் ஆண் குழந்தைகளுக்கு மாத்திரம் அதிகப்படியான சுதந்திரம் கொடுத்து ஆண் குழந்தைகளை வளரும் பருவத்திலேயே சீரழிவை கற்று கொள்ள முதல் காரணிகளாக பெற்றோரே உள்ளனர்
இந்த கோழி குஞ்சை நான் பொறித்து விட்டேனே அல்லது இந்த கோழி குஞ்சை நான் பொறிக்காது இருந்தால் நன்றாக இருக்குமே என்று எந்த தாய் கோழிகளும் வருந்துவதும் இல்லை அதை நினைத்து தற்கொலை செய்து கொள்வதும் இல்லை
ஆனால் பகுத்தறிவை பெற்ற மனித சமுதாயமோ கவனம் செலுத்த வேண்டிய காலத்தில் பொறுப்புணர்வை தட்டி கழித்து விட்டு அய்யோ இந்த பிள்ளையை நான் பெற்றெடுத்ததற்க்கு பதிலாக ஒரு எறுமை மாட்டை பெற்றெடுத்து இருந்தால் நன்றாக இருக்குமே என்று புலம்பும் சூழலை பரவலாக பார்க்கிறோம்
இத்தகைய அறிவிலிகளுக்கு சிறந்த வாழ்கை பாடத்தை கற்று தரும் உயிரினமே கோழிகள்
கோழிகள் போடும் முட்டைகளை ரசனையோடு உண்ணும் மனித சமுதாயம் அதே கோழிகள் அதன் குஞ்சுகளிடம் எவ்வாறு கவனம் செலுத்துகிறது என்பதை அன்றாடம் சில நிமிடம் ரசிக்க துவங்கினாலே மனித சமுதாயத்தில் பல மாற்றங்களை ஏற்படுத்த முடியும்
சிந்தனையுடன் நட்புடன்
J . இம்தாதி
கோழிகளை நீங்கள் ஏசாதீர்கள் அவைகள் உங்களை (பஜ்ருக்கு)அதிகாலை விழிக்க வைக்கிறது
அறிவிப்பாளர் அபூஹீரைரா(ரலி)
நூல் -அபூதாவூத்
اَوَلَمْ يَرَوْا اِلَى الطَّيْرِ فَوْقَهُمْ صٰٓفّٰتٍ وَّيَقْبِضْنَؔ ۘ مَا يُمْسِكُهُنَّ اِلَّا الرَّحْمٰنُ اِنَّهٗ بِكُلِّ شَىْءٍ بَصِيْرٌ
இறக்கைகளை விரித்துக் கொண்டும் சேர்த்துக் கொண்டும், இவர்களுக்கு மேல் (வானில் பறக்கும்) பறவைகளை இவர்கள் பார்க்கவில்லையா? அர்ரஹ்மானைத் தவிர (வேறு யாரும் கீழே விழாது) அவற்றைத் தடுத்துக் கொண்டிருக்கவில்லை நிச்சயமாக அவன் ஒவ்வொரு பொருளையும் நோட்டமிடுபவன்(
அல்குர்ஆன் : 67:19)
முற்றும்