இந்திய தேசத்தின் 72வது குடியரசு தின கொடியேற்று விழா பட்டுக்கோட்டை மணிக்கூண்டு ஹாஜி காதர் முகையதீன் பள்ளிவாசலில் இன்று நடைபெற்றது.
முன்னதாக நிகழ்வில் பள்ளிவாசல் இமாம் முஹம்மது ரஹ்மானி திருக்குர்ஆனை ஓதி துவக்கி வைத்தார். முஹம்மது யஹ்யா வரவேற்புரை நிகழ்த்தினார். பள்ளிவாசல் இமாம் பீர் முஹம்மது ஃபைஜி அவர்கள் குடியரசு தின விழா சிறப்புரை நிகழ்த்தினார்.
பின்னர் ஹாஜி காதர் முகையதீன் வக்ப் பள்ளிவாசல் தலைவர் ஹாஜி. முஹம்மது யூசுப் தேசிய கொடியினை ஏற்றி வைத்தார். தேசிய கீதத்திற்கு பிறகு பட்டுக்கோட்டை அண்ணா நகர் பள்ளி இமாம் ஹனீப் ரப்பானி நன்றியுரை நிகழ்த்தினார்.
விழாவில் இனிப்புகள் மற்றும் தேநீர் வழங்கப்பட்டது. நிகழ்வில் ஜமாத்தார்கள், வியாபாரிகள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பெருமளவில் கலந்து கொண்டனர்.

