புதுடெல்லி: இந்தியர்கள் 64 சதவீதம் பேர் வங்கியை பயன்படுத்துகின்றனர் என ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது. மக்களிடையே வங்கி கணக்கு பயன்பாடு தொடர்பாக இந்தியா, வங்கதேசம், கென்யா, நைஜீரியா, பாகிஸ்தான், தான்சானியா மற்றும் உகாண்டாவில் ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது. 2016ம் ஆண்டை அடிப்படையாக கொண்ட இந்த ஆய்வில் இந்தியாவில் சுமார் 45,000 பேரிடம் சர்வே எடுக்கப்பட்டது. இதில் 64 சதவீதம் இந்தியர்கள் வங்கி கணக்கு பயன்படுத்துவதாக கூறியுள்ளனர்.
இதுபோல் ஆண்கள் 47 சதவீதம் பேரும், பெண்கள் 33 சதவீதம் பேரும் வங்கி கணக்கு பயன்படுத்துகின்றனர். நகர்ப்புறங்களில் உள்ளவர்கள் அதிகமாக பயன்படுத்துகின்றனர். அதாவது நகர்ப்புறங்களில் உள்ளவர்கள் 46 சதவீதம் பேரும், புறநகர்களில் உள்ளவர்கள் 37 சதவீதம் பேரும் வங்கி கணக்கை பயன்படுத்துகின்றனர். மற்ற நாடுகளை விட இந்தியர்களிடையேதான் வங்கி பயன்பாடு அதிகம் உள்ளது. இந்தியர்கள் 64 சதவீதத்துடன் முதல் இடத்தில் இருக்கின்றனர். இதை தொடர்ந்து நைஜீரியா (41%),, கென்யா (31%), இந்தோனேஷியா (30%), வங்கதேசம் (19%), பாகிஸ்தான் (9%)) ஆகியவை அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன. மொத்த வங்கி கணக்குகளில் சுமார் 21% ஜன்தன் கணக்குகளாக உள்ளன. முந்தைய ஆண்டில் இது 19 சதவீதமாக இருந்தது என ஆய்வில் கூறப்பட்டுள்ளது.